2வது திருமணம் செய்த கணவர்..ஒட்டுமொத்த குடும்பத்துக்கே தீ வைத்த முதல் மனைவி !

Published : May 15, 2022, 03:21 PM IST
2வது திருமணம் செய்த கணவர்..ஒட்டுமொத்த குடும்பத்துக்கே தீ வைத்த முதல் மனைவி !

சுருக்கம்

பீகார் மாநிலம் ப்ரவுல் நகரின் ஷேக்பூர் தோலா பகுதியை சேர்ந்தவர்கள் முகமது குர்ஷித் ஆலம் (40) குல்ஷன் காதுன் (35) தம்பதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. 

இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரோஷன் காதுன் (28) என்ற பெண்ணை முகமது குர்ஷித் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து அவருடைய இரண்டாவது மனைவி ரோஷன் காதுன் கர்ப்பமாக இருந்தார். அதனால் முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவி மீதும் அவரது மாமியார் ஜுபைதா காதுன் (65) மீதும் கசப்பு ஏற்பட்டது. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட குடும்பத் தகராறில் அந்த நபரின் முதல் மனைவி, தன் மீதும், குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில் மாமியாரும் 2வது மனைவியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். முதல் மனைவியும், அவருடைய கணவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் அவர்களும் பலியாகினர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணைக்காக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறில் மொத்த குடும்பத்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய முதல் மனைவியின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. கோரிக்கை மனுவை அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின் !

இதையும் படிங்க : TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மார்க் இருக்கு.. மாணவர்கள் ஷாக்.! வெளியான அதிர்ச்சி தகவல் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!