ரிட்டையர்டு வாத்தியாரின் காம லீலைகள்.. 30 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்ததாக பகீர் தகவல்?

Published : May 15, 2022, 02:53 PM IST
ரிட்டையர்டு வாத்தியாரின் காம லீலைகள்.. 30 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்ததாக பகீர் தகவல்?

சுருக்கம்

அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 38 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆசிரியர் சசிகுமார் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 38 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆசிரியர் சசிகுமார் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (57). மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் பள்ளி ஆசிரியர் ஆவார். மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராகவும் இருந்தார். இந்நிலையில், ஆசிரியர்  சசிகுமார் பணியில் இருந்தபோது 100க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம்  செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில்  தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இது  தொடர்பாக போலீசில் எந்த புகாரும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு  முன் ஆசிரியர் சசிகுமார் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறி ஒரு மாணவி மலப்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து,  அவர் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து  அறிந்த சசிகுமார் தலைமறைவானார்.

இதற்கிடையே அவர்  கவுன்சிலர் பதவியை  ராஜினாமா செய்தார். மேலும் கட்சியிலிருந்து அவரை சிபிஎம் சஸ்பெண்ட்  செய்தது. இந்நிலையில், வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியிலுள்ள ஒரு  சுற்றுலா விடுதியில் பதுங்கியிருந்த சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!