10 வயதிலேயே பக்கா ஸ்கெட்ச் போட்ட சிறுவர்கள்.! ஊர் மக்களும், போலீசாரும் அலறல்.! அம்பலமான கடத்தல் நாடகம்

Published : Nov 09, 2022, 01:01 PM ISTUpdated : Nov 09, 2022, 01:11 PM IST
10 வயதிலேயே பக்கா ஸ்கெட்ச் போட்ட சிறுவர்கள்.! ஊர் மக்களும், போலீசாரும் அலறல்.! அம்பலமான கடத்தல் நாடகம்

சுருக்கம்

பள்ளிக்கு கட் அடித்த சிறுவர்கள் பெற்றோரிடம் மாட்டிக்கொண்ட நிலையில், தங்களை வட மாநில இளைஞர்கள் கடத்தியதாக பொய்யாக கூறியதால் வடமாநிலத்தவர்களை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள் கடத்தலா.?

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை  வட மாநில கும்பல் கடத்தியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்களை  தள்ளு வண்டியில் வைத்து போர்வை விற்பனை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கடத்தி விட்டதாக பரவிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து  கடத்தப்பட்டது தங்களது மகன்களாக இருக்குமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே சில்லமரத்துப் பட்டியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சிலமலை- இராசிங்காபுரத்திற்கு இடையே உள்ள இடத்தில் இருந்த மூன்று மாணவர்களையும் மீட்டதுடன், அப்பகுதியில் தள்ளு வண்டியில் பெட்சீட் விற்றுக்கொண்டு சென்ற   வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரை பிடித்து பொதுமக்கள் அடித்து துவைத்துள்ளனர். 

திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை.. உயர்நீதிமன்ற மதுரை அதிரடி

வட மாநிலத்தவருக்கு அடி,உதை

அந்த நபர் என்ன நடந்தது என்றே தெரியாமல், எனக்கு எதுவும் தெரியாது, எதற்காக அடிக்கிறீர்கள்? என்று கேட்டபோது எங்களது குழந்தைகளை கடத்தியது நீதானே என்று கேட்டபோது, நான் அவ்வாறு செய்யவே இல்லை என்று மறுத்தார். இதனைத் தொடர்ந்து போடி ஊரக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போடி  காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பள்ளியில் 197 மாணவ மாணவிகள் பயிலும் நிலையில் வகுப்பு வாரியாக கணக்கெடுக்கப்பட்டது. விடுப்பில் உள்ள குழந்தைகள் மற்றும்  கடத்தப்பட்டதாக கூறி மீட்கப்பட்ட மூன்று மாணவர்கள் உட்பட அனைவரும் பத்திரமாக இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

பள்ளிக்கு கட் அடித்த சிறுவர்கள்

இதனைத் தொடர்ந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மற்றும் திலீப் என்ற மகாராஷ்டிராவை சேர்ந்த போர்வை வியாபாரி ஆகியோரை போடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, நண்பர்களான மூன்று மாணவர்களும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், இன்று காலை 8:30 மணிக்கு வழக்கம் போல் வீட்டை விட்டு பள்ளி சீருடையுடன் புறப்பட்டுள்ளனர். பின்னர் பள்ளிக்கு செல்லாமல் வகுப்பை கட்டடிக்க முடிவு செய்த மூவரும் சில்லமரத்துப்பட்டியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிலமலை பகுதிக்கு சென்றுள்ளனர். ராசிங்கபுரம் அருகே சென்றபோது  மூன்று சிறுவர்களில் ஒரு சிறுவனின் தந்தை அப்பகுதி வழியாக வந்துள்ளார்.

9 மாவட்டத்தில் போலி வங்கிகள்.!! உஷாரா இருங்க மக்களே.! எச்சரிக்கும் காவல்துறை

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

பள்ளிக்குச் செல்லாமல் இங்கே எதற்காக வந்தீர்கள்?என்ற விசாரித்த போது, பெற்றோரிடம் சிக்காமல் இருப்பதற்காக, அப்பகுதியில் இருந்து சற்று தூரத்தில் தள்ளு வண்டியில் வைத்து போர்வை விற்றுக் கொண்டிருந்த வட மாநில நபரை கையைக் காட்டி, அந்த நபர் போர்வையில் வைத்து சுற்றி தங்களை கடத்தி வந்து விட்டதாக மூவரும் அழுது கொண்டே தெரிவித்துள்ளனர். குழந்தைகள் கூறியதை உண்மை என நம்பிய அந்த மாணவனின் தந்தை சில்லமரத்துப்பட்டியில் உள்ள மற்ற மாணவர்களின் தந்தை மற்றும் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்து விட்டார். இதனால் அனைத்து மாணவ மாணவிகளின் பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டதுடன் வட மாநில இளைஞரை நையப் புடைத்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் வெளியான இந்த தகவல்களால் காவல்துறையினர் மட்டுமல்ல பெற்றோர்களும் கல்வித்துறை அதிகாரிகள் உட்பட அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

வாக்கிங் சென்ற கேபிள் டி.வி. ஆபரேட்டர் வெட்டி படுகொலை.. 6 பேர் அதிரடி கைது.. இது தான் காரணமா?

10 வயதில் கடத்தல் நாடகம்

மேலும் சிறுவர்கள் கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலான நிலையில், இது குறித்து காவல்துறை தலைமையகம் வரை தகவல் சென்று இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட அனைவருமே பள்ளிக்கும், காவல்நிலையத்திற்கும் அலையாய் அலைந்தனர். ஐந்தாம் வகுப்பு வகுப்பு மட்டுமே படிக்கும் நிலையில்,10 வயதில் கடத்தல் நாடகம் போட்டு பெற்றோர் மட்டுமல்ல காவல்துறையினர், கல்வித்துறையினர், பெற்றோர், ஊர் பொதுமக்கள் என அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

அப்பாவி வடமாநில போர்வை வியாபாரியை நையபுடைக்கச் செய்து ஒவ்வொரு போர்வை வியாபாரியையும் காவல்துறையினரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரச் செய்யும் அளவுக்கு செய்த சிறுவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து இந்த தவறை செய்த மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக கவுன்சிலிங் வழங்கப்பட்டதாக போடி டிஎஸ்பி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

உஷாரான திமுக.. இந்த முறை பொங்கல் தொகுப்பு கிடையாது.. அதுக்கு பதில் ரூ.1000 வழங்க முடிவு.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!