
திருச்சி அருகே நடைபயிற்சி ஈடுபட்டுக்கொண்டிருந்த கேபிள் டிவி உரிமையாளர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் மாதவன் (48). இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டர். அங்குள்ள மாரியம்மன் கோவில் கமிட்டியின் பொருளாளராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும், ரிஷிவந்த் (17) என்ற மகனும், லித்திஸ்கா (11) என்ற மகளும் உள்ளனர். மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. வாழைத்தோப்புக்குள் தூக்கிச் சென்று வாயை பொத்தி கதற கதற கல்லூரி மாணவி பலமுறை பலாத்காரம்.!
இந்நிலையில், நேற்று காலையில் மாதவன் வழக்கம் போல நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 கொண்ட மர்ம கும்பல் மாதவனை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்.. வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கோயில் நிலம் ஆக்கிரமிப்பை மீட்பதில் மாதவன் தீவிரமாக இருந்ததால், அதன் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- டிக்டாக் வீடியோ போடாத.! சினிமா துணை நடிகையை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.!