பிரியாணி கேட்ட மனைவியை கொளுத்திய கணவன்… சென்னையில் பயங்கரம்!!

Published : Nov 08, 2022, 06:45 PM IST
பிரியாணி கேட்ட மனைவியை கொளுத்திய கணவன்… சென்னையில் பயங்கரம்!!

சுருக்கம்

பிரியாணி கேட்ட மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 

பிரியாணி கேட்ட மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை அயனாவரம் தாகூர் நகரை சேர்ந்தவர் கருணாகரன். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். மேலும் அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் கருணாகரன் தன் மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கருணாகரன்  பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்ட பத்மாவதி தனக்கும் வேண்டும் என கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்.. வாழைத்தோப்புக்குள் தூக்கிச் சென்று வாயை பொத்தி கதற கதற கல்லூரி மாணவி பலமுறை பலாத்காரம்.!

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து கருணாகரன் மண்ணெண்ணையை பத்மாவதி மீது ஊற்றி கொளுத்தினார். இதை அடுத்து பத்மாவதி அலறியடித்துக் கொண்டே கருணாகரனை கட்டிப்பிடித்துள்ளார். இதனால், கருணாகரனுக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களின் அலறல் சத்தம் கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பத்மாவதி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?

50 சதவீத தீக்காயங்களுடன் கருணாகரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இறப்பதற்கு முன்னதாக மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பேசிய பத்மாவதி, கணவர் தனியாக பிரியாணி சாப்பிடுவதை கண்டு தனக்கும் பிரியாணி வாங்கி தர கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டு, தன்னை கொளுத்தியதாக தெரிவித்திருந்தார். இதை அடுத்து கருணாகரன் மீது கொலை வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!