நல்லவனைபோல பேசி, பேஸ்புக் தோழியை கிளினிக் அழைத்த டாக்டர்.. ஆஸ்பத்திரி மெத்தையில் படுக்கவைத்து பலாத்காரம்..

Published : Oct 03, 2022, 03:29 PM IST
நல்லவனைபோல பேசி, பேஸ்புக் தோழியை கிளினிக் அழைத்த டாக்டர்.. ஆஸ்பத்திரி மெத்தையில் படுக்கவைத்து பலாத்காரம்..

சுருக்கம்

ஃபேஸ்புக்கில் நட்பாக பழகிய பெண்ணை மருத்துவமனைக்கு  அழைத்த டாக்டர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில்  போலீசார் டாக்டர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர் .  

ஃபேஸ்புக்கில் நட்பாக பழகிய பெண்ணை மருத்துவமனைக்கு  அழைத்த டாக்டர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில்  போலீசார் டாக்டர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

நாட்டில் எத்தனையோ துறைகள் இருந்தாலும், கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் ஒரு துறை உண்டு என்றால் அது மருத்துவத் துறைதான். உயிரையும் காப்பாற்றும் மருத்துவர்களையே மக்கள் இறைவனுக்கு நிகராக போற்றி மதிக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட துறையில் ஒரு சிலர் கேவலமான காரியங்களில் ஈடுபட்டு மருத்துவ துறைக்கே அவமானத்தை தேடித் தரும் சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது. சிலர் தனது தாய் தந்தையிடம் கூட சொல்லத் தயங்கும் விஷயங்களைகூட வெளிப்படையாக மருத்துவர்களிடமே கூறுவர்,

எத்தனையோ இளம் பெண்கள் பெற்றோரிடம் பேச சிரமப்படும் பிரச்சினைகளை கூட மருத்துவர்களிடம் வெளிப்படையாக பேசுவார், அந்த அளவிற்கு நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்தான் மருத்துவர்கள், ஆனால் அப்படிப்பட்ட மருத்துவர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் இளம்பெண்ணிடம் நடந்து கொண்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- உத்திரபிரதேசம் மாநிலம் பாஸ்டி  மாவட்டத்தில் ஓகா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சித்தார்த்.

இதையும் படியுங்கள்: 8 மாத கர்ப்பதை தொப்பை என நாடகமாடிய மகள்.. ஆஸ்பத்திரியில் குவா குவா.. போக்சோவில் காதலன் கைது.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே முகநூலில் நட்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டதுடன் அடிக்கடி சந்தித்து நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண் மீது டாக்டர் சித்தார்த்திற்கு பாலுணர்வு ஏற்பட்டது. அந்த பெண்ணை எப்படியாவது அடையவேண்டும் என அவர் திட்டம் தீட்டினார்.

இதையும் படியுங்கள்:  என் அம்மாவின் கள்ளக்காதலன் என்னை நாசம் பண்ணிட்டான்.. ஃபர்ஸ்ட் நைட்டில் கணவனுக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.!

இதனால் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்தார். அந்த பெண்ணை கவரும் வகையில் பல வேலைகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.ஒரு நாள் நட்பாக தனது கிளினிக்கிற்கு வரும்படி அந்தப் பெண்ணை அழைத்தார், அந்தப்  பெண்ணும் நட்பாகவே சித்தார்த்தின் கிளினிக்கிற்கு வந்தார்.

அப்போது அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்ற அவர், கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த பெண் மயங்கினார், பின்னர் தனது நண்பர்களுக்கும் போன் செய்து அழைத்தார், அங்கு வந்த அவர்களும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் அந்தப் பெண் வீட்டுக்கு சென்று தனக்கு நடந்தவற்றை கூறி கதறினார், பெற்றோர்கள் துணையுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் டாக்டர் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டாக்டரை தேடி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்