குரோம்பேட்டையில் தம்பதி கழுத்து அறுக்கப்பட்டு மர்ம மரணம்; காவல்துறை விசாரணை

By Dinesh TG  |  First Published Oct 3, 2022, 2:41 PM IST

குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டையில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த கணவன், மனைவியின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


செங்கல்பட்டு மாவட்டம்  குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா இவர்கள் இருவரும் பிள்ளையார் கோவில் முதல் குறுக்கு தெருவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் புதிதாக குடிவந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ள நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் தனது பெற்றோர் இரண்டு நாட்களாக வராததால் ஆறுமுகத்தின் பெரிய மகள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். கதவு திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன்  கதவை  உடைத்து பார்த்துள்ளார். அப்போது வீட்டினுள் தாய் மஞ்சுளா, தந்தை ஆறுமுகம் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில்  இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்,

நீலகிரியில் பைக்கிற்கு பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்

இது குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கபட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்க்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

மேலும் கணவன், மனைவி கழுதறுபட்டு இறந்த நிலையில் இருந்ததால் கொலை செய்யபட்டார்களாக அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். இருவரின்  உடல்களைப் பார்த்து மகள்கள்  மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!