புது மணப்பெண் கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம்.. அலறிய மாப்பிள்ளை.. திருமணம் நடந்த 3 நாளில் அதிர்ச்சி சம்பவம்

By Raghupati R  |  First Published Sep 12, 2022, 7:35 PM IST

புதுப்பெண் கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனியை சேர்ந்த 25 வயது வாலிபர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் போத்தனூரை சேர்ந்த பட்டதாரியான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 9 ஆம் தேதி திருமணம் நடந்தது.

Tap to resize

Latest Videos

திருமணமான 2-வது நாளில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்தநிலையில் கணவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என அனுப்பி இருந்தார். 

மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்

இதனால் கணவரும், பெண்ணின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். கணவர் இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே அவரது வீட்டின் அருகே வசிக்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். 

இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வேறு சாதி பையனை காதலித்த மகள்.. மறுத்த தந்தை எடுத்த விபரீத முடிவு - காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்

click me!