அதிர்ச்சி!! இறந்த 2 வயது தம்பி உடலுடன் அமர்ந்திருந்த சிறுவன்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்..

By Thanalakshmi VFirst Published Jul 11, 2022, 10:58 AM IST
Highlights

மத்திய பிரதேசத்தில் சாலையோரத்தில் இரண்டு வயது தம்பியின் இறந்த உடலை மடியில் கிடத்தி கண்ணீருடன் உட்கார்ந்திருந்த 8 வயது சிறுவனின் நிலையைப் பார்த்து ஏராளமானோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் மொரேனா மாவட்டம் அம்பா கிராமத்தில் வசிக்கும் பூஜாராம் என்பவருக்கு, குல்ஷன் மற்றும்  ராஜா  என்ற இருமகன்கள் உள்ளனர். 2 வயது ஆகும் ராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மொரேனா மாவட்ட மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைகாக பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க:தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.. கதவை பூட்டிக் கொண்டு வன்புணர்வு.

தனது கிராமத்தில் இருந்து 30 கி.மீ தூரமுள்ள மருத்துவமனைக்கு பூஜாராம், உடல்நிலை சரியில்லாத ராஜா மற்றும் மூத்த மகனுடன் வந்துள்ளார். இந்நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ராஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது மகனின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார். பின்னர் உடலை எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததாக கூறபடுகிறது.

மேலும் படிக்க:ஒரே நேரத்தில் 3 போலீஸ்காரர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்து அதிர்ந்து போன கணவர்.!

தனியார் ஆம்புலன்ஸ்யில் உடலை எடுத்து செல்ல வாடகை ரூ.1500 கேட்டுள்ளனர். இதனை கொடுக்க முடியாமல் தவித்த ராஜாராம், மருத்துவமனைக்கு வெளியே சாலையோரத்தில் குல்ஷன் மடியில் ராஜா உடலை கிடத்தி வைத்து விட்டு வாகனம் ஏதாவது கிடைக்குமா என்பதை தேடிப் பார்க்க சென்றுள்ளார். தம்பியின் உடலை சுற்றும் ஈக்களை விரட்டி விட்டு, கண்ணீருடன் இருக்கும் அந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது. இது காண்போரின் நெஞ்சை கலங்கச் செய்கிறது. 

மேலும் படிக்க:அண்ணிக்கு பலான டார்ச்சர்.. போனில் ஆபாச மெசேஜ்.. முத்தம் கேட்டு இம்சித்த மைத்துனன் மீது போலீசில் புகார்.

இறந்த தம்பியின் உடலை மடியில் சுமந்து சாலையோரமாக அமர்ந்திருக்கு நத சிறுவனை, பத்திரக்கையாளர் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அதைப் பார்த்த காவல்துறையினர் சிறுவனிடம் விசாரித்துள்ளார். பின்னர்  மாவட்ட மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை எச்சரித்துள்ளார். இதையடுத்து பூஜாராமுக்கு ஆம்புலன்ஸ் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளதுது. தம்பி உடலுடன் கண்ணீருடன் குல்ஷன் அமர்ந்திருந்த படத்தை பார்த்து ஏராளமானோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

click me!