தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.. கதவை பூட்டிக் கொண்டு வன்புணர்வு.

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2022, 6:15 PM IST
Highlights

திருமணமான பெண்ணை கணவன் வீட்டில் இல்லாத போது வீட்டுக்குள் நுழைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

திருமணமான பெண்ணை கணவன் வீட்டில் இல்லாத போது வீட்டுக்குள் நுழைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருப்பவர் நாகேஸ்வரராவ், இவர் மீது கணவன் மனைவி கற்பழிப்பு, கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முழு விவரம் பின்வருமாறு:- அஸ்தினாபுரம் வெங்கடேஸ்வரா காலனியில்  திருமணமான தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாரேடுபள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வர ராவ் அந்த வீட்டில் கணவர் இல்லாதபோது வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கப்பலில் கணவன்.. லீசுக்கு குடி வந்த இளைஞனுடன் மனைவி உல்லாசம்.. கள்ளக் காதலனை காரை விட்டு தூக்கி அதகளம்.

இது குறித்து தகவல் அறிந்த கணவர் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கி முயன்றபோது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கணவன் மனைவி இருவரையும் கொன்று விடுவேன் என எச்சரித்த்துடன், நான் சொல்வதை கேட்காவிட்டால் இருவர் மீதும் விபச்சார வழக்கு அல்லது கஞ்சா வழக்கு பதிவு செய்து தூக்கி உள்ளே போட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

பின்னர் இருவரையும் கொலை செய்யும் திட்டத்தில் போலீஸ் வாகனத்தில் ஏற்றி இப்ராஹிம் பட்டி ஏரிக்கரை சாலைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் சென்ற வாகனம்  விபத்துக்குள்ளானது, அப்போது இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவை அங்கேயே விட்டுவிட்டு கணவன்-மனைவி இருவரும் அங்கிருந்து தப்பினர்.

இதையும் படியுங்கள்:  டுவிட்டரில் வெறுப்பு பேச்சு.. பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது.. மதக்கலவரத்தை தூண்டியதாக வழக்கு..

உடனடியாக வனஸ்தலிபுரம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த அத்தம்பதியர் இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவின் அட்டூழியம் குறித்து புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் நாகேஸ்வரராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நாகேஸ்வரராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

முன்னாதக கடந்த 2018 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மீது பொய் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் தனது விவசாய நிலத்தை கவனித்துக் கொள்வதற்காக  பண்ணைக்கு அருகிலேயே தங்களை தங்க வைத்திருந்ததாகவும் 10 மாத காலம் அவர்களிடம் தாங்கள் வேலை செய்ததாகவும் அப்போது அங்கு தனது மனைவிக்கு இன்ஸ்பெக்டர் செல்போனில் ஆபாச மாகப் பேசி தொல்லை கொடுத்து வந்ததுடன், தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு இன்ஸ்பெக்டர் மிரட்டி வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டரால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறினார், தன்னிடமும் தனது கணவரிடமும் மிகக் கொடூரமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவின்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் அவரை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். விரைவில் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டரை வனஸ்தலிபுரம் போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

 

click me!