டுவிட்டரில் வெறுப்பு பேச்சு.. பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது.. மதக்கலவரத்தை தூண்டியதாக வழக்கு..

Published : Jul 09, 2022, 03:09 PM ISTUpdated : Jul 09, 2022, 03:42 PM IST
டுவிட்டரில் வெறுப்பு பேச்சு.. பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது.. மதக்கலவரத்தை தூண்டியதாக வழக்கு..

சுருக்கம்

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மதவாதத்தை தூண்டும் வகையிலும் தொடர்ந்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு வந்த நிலையில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பாஜகவினர் இந்து மத சித்தாந்தம் மற்றும் கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர் அதுமட்டுமின்றி கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களை சீண்டும் வகையிலும் சிலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஒபிஎஸ் சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் இபிஎஸ்.. முக்கிய பிரமுகர்கள் திடீர் ஆதரவு.. உயரும் எண்ணிக்கை.!

இந்த வரிசையில் தமிழக பாஜக வை சேர்ந்தவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர். அதிலும் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பாஜகவினர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருவதுடன், மதச் சாயம் பூசி மக்களிடையே வெறுப்பை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இப்படியான குற்றச்சாட்டு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வத்துக்கு எதிராக கூறப்பட்டது, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக மத சாயம் பூசி தகவல் வெளியிட்டதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: முதல்ல என் தம்பி யுவன் சங்கர் ராஜாவே BJP க்கு ஓட்டு போட மாட்டான்... வாக்கரசியல் வேலைக்கு ஆகாது ராஜா - சீமான்

இதேபோல ஆக்கிரமிப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் இடிக்கப்படவில்லை என ஒருவர் பேசிய  வீடியோவை பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீதும் தனியா மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது அப்போது காவல்துறை தரப்பில் வினோஜ் பி செல்வம் செய்தியை பகிர்ந்தையும் தாண்டி அரசியல் செயல்பாட்டை தேர்தல் நடவடிக்கைகள் உடனும்  மதத்தையும் தொடர்புபடுத்தும் விமர்சித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் பாஜக செயற்குழு உறுப்பினரான சவுதாமணி பகிர்வால் மதக்கலவரம் தூண்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த விசாரணையில் வினோத் பி. செல்வதற்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 

இந்நிலையில் கலவரத்தை தூண்டுதல், அரசு ஊழியர்களுக்கு எதிராக அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளில் சவுதாமணி மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சவுதாமணியை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!