அத்தை செய்த எக்குத்தப்பான காரியம்... 16 வயது சிறுவனை அடைய ஆசை... கடைசியில் நடந்த திடீர் திருப்பம்..!

Published : Sep 11, 2021, 11:43 AM ISTUpdated : Sep 11, 2021, 11:44 AM IST
அத்தை செய்த எக்குத்தப்பான காரியம்... 16 வயது சிறுவனை அடைய ஆசை... கடைசியில் நடந்த திடீர் திருப்பம்..!

சுருக்கம்

தனது அத்தை தனக்கு பாலியல் தொல்லை தருவதாக 16 வயது சிறுவன் புகார் தெரிவித்துள்ளான்.

தனது அத்தை தனக்கு பாலியல் தொல்லை தருவதாக 16 வயது சிறுவன் புகார் தெரிவித்துள்ளான். பாலியல் ரீதியிலான வன்முறைகள் அரங்கேறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாற்றார்கள் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது போய், சொந்த அண்ணன், பெற்ற தகப்பன், உற்றார் உறவினர்கள் என பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், சிறுவர்களுக்கும் அவர்களது சித்தி, அத்தை மூலம் பாலியல் தொல்லை ஏற்பட்டு வருகிறது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவன் அந்த சிறுவன். இந்நிலையில் தனியாக இருக்கும் போது தனது அத்தைபல நாட்களாக தன்னை பாலியல் ரீதியிலாக அணுகுவதாகவும், பல முறை எச்சரித்தும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளான். வெகுநாட்களாக இந்த சிக்கலை சந்தித்து வந்துள்ளான்.

இந்நிலையில், தனியாக இருக்கும் தனக்கு அத்தை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குழந்தைகள் நல அமைப்பிற்கு அந்த சிறுவன் தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்துள்ளான். இந்த நிலையில் குழந்தைகள் நல அமைப்பின் உதவியுடன் சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த சிறுவனின் அத்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்