கர்ப்பமாக இருந்த மனைவியின் அந்த உறுப்பை கரகரவென அறுத்த கணவன்.. தாய் வீட்டுக்கு செல்ல முயன்றதால் வெறிச் செயல்.

Published : Sep 10, 2021, 05:47 PM ISTUpdated : Sep 10, 2021, 05:51 PM IST
கர்ப்பமாக இருந்த மனைவியின் அந்த உறுப்பை கரகரவென அறுத்த கணவன்.. தாய் வீட்டுக்கு செல்ல முயன்றதால் வெறிச் செயல்.

சுருக்கம்

அதில் அந்தபெண்ணின் மூக்கு துண்டானது, ரத்தம் கொட்டியது, வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறினார், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர், இதற்கிடையில்  மனைவி மூக்கு துண்டானதை கண்ட கணவன் பூமா ராம் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்.  

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியின் மூக்கை அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மனைவியின் மூக்கை அறுத்துவிட்டு தப்பிய கணவனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தை முதல் 90 வயது கிழவிகள் கற்பழிக்கப்படும் அவலம் நாட்டில் அதிகரித்துள்ளது.  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, கதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது போன்ற பல்வேறு சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது. அதேபோல் வரதட்சனை கேட்டு மனைவியை அடித்து கொடுமை செய்யும் குடும்ப வன்முறைகளும் ஆங்காங்கே அரங்கேறிவருகிறது. அந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அதிர்ச்சி சம்பவம் ஓன்று நடந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகேயுள்ள லூனாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமா ராம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பூனம் தேவியை (25) திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது, எனவே தனது தாய் வீட்டுக்கு செல்ல அனுமதிக்குமாறு அந்தப் பெண் கணவனிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த கணவர், தாய் வீட்டுக்கு செல்வதாக இருந்தால் அவர்களது நிலத்தில் பங்கு வாங்கி வரவேண்டும் எனக்கூறி, அந்தப் பெண்ணை  சரமாரியாக அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்த சண்டை இருவருக்குமிடையே கடந்த சில தினங்களாக நீடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் செல்வதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கணவர் பூமா ராம் அந்தப் பெண்ணை மேலும் அடித்து உதைத்ததுடன் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து அந்தப் பெண்ணின் மூக்கை கரகரவென அறுத்தார்.

அதில் அந்தபெண்ணின் மூக்கு துண்டானது, ரத்தம் கொட்டியது, வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறினார், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர், இதற்கிடையில்  மனைவி மூக்கு துண்டானதை கண்ட கணவன் பூமா ராம் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்.  மூக்கு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை ஆம்புலன்ஸ் உதவியுடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் அந்தப் பெண் காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் கொடுத்தார், குடிம்ப சண்டையில் மனைவியின் மூக்கை கணவன் அறுத்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வன்முறை சட்டப் பிரிவின் கீழ் போலீசார் கணவன் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!