
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் லிங்கநாதன்(40). இவருடைய மனைவி அங்கயற்கண்ணி. இவர்களுக்கு 7 வயதில் மகள் இருக்கிறாள். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு தன் கணவர் கள்ளக்காதல் வைத்திருந்தது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!
இந்நிலையில் இரவு லிங்கநாதன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அவர் மீது தீ எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அருகில் உள்ள வீட்டில் போய் தன் மனைவி தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி எரித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனை கொண்டு சென்றனர்.
மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கே சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விசாரணையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், கணவனை மனைவியே தீ வைத்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து லிங்கநாதன் மனைவி அங்கயற்கண்ணியை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு.. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்க உதவி செஞ்சிருப்போம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சீக்ரெட்