அந்த வாத்தியார் என் கிட்ட தப்பா நடந்துக்கிறார்.. நீ டிரஸ் ஒழுங்கா போடும்மா.. கல்லூரி நிர்வாகம் திமிர் பேச்சு.

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2022, 11:46 AM IST
Highlights

அந்த கமிட்டியின் வாயிலாக மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்க ஏதுவாக இருக்கும் என்றும் மேலும் கல்லூரியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

சென்னை தாம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் அது குறித்து புகார் தெரிவித்தும் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது புகார் கொடுக்கச் சென்ற மாணவியிடம், முதலில் நீங்கள் ஆடையை சரியாக உடுத்துங்கள் என கல்லூரி நிர்வாகம் அறிவுரை கூறித் தட்டிக் கழிப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்புணர்வு செய்வது, திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி கைவிடுதல், காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது என எண்ணற்ற வன்முறைகளுக்கு பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது. இதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் முதல் பணிக்குச் செல்லும் பெண்கள் வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் சம்பங்கள் அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் கல்லூரி  மாணவியிடம் கல்லூரி பேராசிரியர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த தாம்பரத்தில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் பிஎச்டி படித்து வரும் மாணவி ஒருவரிடம்  பேராசிரியர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். ஆனால் அந்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அந்த நிர்வாகம் மாணவிகள் நீங்கள் ஒழுங்காக ஆடை அணிய வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் இதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திடீரென கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவ-மாணவிகளின் பிரச்சினைகளை நிர்வாகத்திடம் தெரிவிக்க  மாணவர்களுக்கான தேர்தல் நடத்தி தனி கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அந்த கமிட்டியின் வாயிலாக மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்க ஏதுவாக இருக்கும் என்றும் மேலும் கல்லூரியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர். மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர். ஆசிரியர் மீது புகார் கூறிய மாணவிகளின் ஆடை குறித்து கூறுவதை கல்லூரி நிர்வாகம் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.  இதனையடுத்து கல்லூரி மாணவர்களிடம் பேசிய முதல்வர் மாணவர்களின் கோரிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசையும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
 

click me!