தூத்துக்குடியில் பயங்கரம்... காவல்துறை உதவி ஆய்வாளரை லாரி ஏற்றிக் கொன்ற குடிகாரன்..!

Published : Feb 01, 2021, 10:36 AM IST
தூத்துக்குடியில் பயங்கரம்... காவல்துறை உதவி ஆய்வாளரை லாரி ஏற்றிக் கொன்ற குடிகாரன்..!

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது மினி லாரியை ஏற்றி கொலை செய்த நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு கொற்கையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது போதையில் சுற்றிய முருகவேல் என்பவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து உதவி ஆய்வாளர் பாலுவை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்த முருகவேலை கைது செய்ய 10 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதேபோல், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற ஒரு காவலரை நாட்டு வெடிகுண்டை வீசி ரவுடி கும்பல் கொலை செய்தது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்