மன்மதன் படம் பாணியில் ராமுலு.. 21 இளம் பெண்களிடம் வெறி தீர உல்லாசமாக இருந்து கொலை.. சீரியல் கில்லர் கைது.!

Published : Jan 29, 2021, 04:25 PM IST
மன்மதன் படம் பாணியில் ராமுலு.. 21 இளம் பெண்களிடம் வெறி தீர உல்லாசமாக இருந்து கொலை.. சீரியல் கில்லர் கைது.!

சுருக்கம்

காதலிப்பது போல் நடித்து  21 இளம் பெண்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களை கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்த சீரியல் கில்லர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

காதலிப்பது போல் நடித்து  21 இளம் பெண்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களை கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்த சீரியல் கில்லர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்  வாராங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமுலு(45) மார்பல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்யப்பட்டது. ஆனால், திருமணமான சில நாட்களிலேயே குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால், ராமுலு தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில், அப்பகுதியில் இரண்டு பெண்கள் திடீரென மாயமானதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. போலீசார் விசாரணையில் ராமுலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரைணயில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. டிப்டாப்பாக இருக்கும் ராமுலு இளம்பெண்களை காதலிப்பது போல் நடிப்பார். 

தனது காதல் வலையில் விழும் இளம்பெண்களிடம் உல்லாசமாக இருப்பாராம். பின்னர் திருமணம் செய்வதாக கூறி அவர்களிடம் இருக்கும் நகை, பணத்தை வாங்கிக் கொள்வாராம். திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்தால் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு உல்லாசமாக இருந்து விட்டு அவர்களை கொலை செய்துவிட்டு அவர்கள் அணிந்திருந்திருக்கும் நகைகளை பறித்துக் கொள்வார். பின்னர் சடலத்தை எரித்து புதைத்து விடுவாராம். இவ்வாறு 19 மேற்பட்ட பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு கொலை செய்துள்ளார். 

 இந்த வழக்குகளில் கைதான ராமுலு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த சில மாதங்களில் வழக்கு விசாரணைக்காக போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது போலீசாரிடம் தப்பித்து தலைமறைவாகவிட்டார். தலைமறைவான ராமுலு மேலும் 2 பெண்களை கடத்தி நகை, பணத்தை பறித்துக் கொண்டு கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமுலு கைது செய்யப்பட்டார். 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்