அதிர்ச்சி சம்பவம்... நினைக்கும் போதெல்லாம் பாலியல் பலாத்காரம்... வளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு HIV தொற்று..!

Published : Jan 28, 2021, 04:24 PM IST
அதிர்ச்சி சம்பவம்... நினைக்கும் போதெல்லாம் பாலியல் பலாத்காரம்...  வளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு HIV தொற்று..!

சுருக்கம்

மதுரையில் வளர்ப்புத் தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் வளர்ப்புத் தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியை அருகே உள்ள வன்னிவேலம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் கேரளாவில் வேலை பார்த்தபோது அங்கு தான் தங்கியிருந்த வீட்டின் அருகே ராணி என்ற பெண்ணுடன் கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராணிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவரது கணவர் இறந்துவிட்டதால், ராமமூர்த்தியுடன் சேர்ந்து மதுரை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராணியின் 13 வயது மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து,  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்தனர். அதில்,  சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதும், அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர், சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ராமமூர்த்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிறுமிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!