சீர்காழியில் 2 பேரை கொலை செய்து நகை கொள்ளை... தப்பிக்க முயன்ற போது என்கவுன்ட்டர்... கொள்ளையன் ஒருவன் பலி..!

By vinoth kumarFirst Published Jan 27, 2021, 12:12 PM IST
Highlights

சீர்காழியில் 2 பேரை கொன்று தங்க நகைகளை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்ற இரு கொள்ளையர்களை கைது செய்து 16 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

சீர்காழியில் 2 பேரை கொன்று தங்க நகைகளை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்ற இரு கொள்ளையர்களை கைது செய்து 16 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி (50). இவர் தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில் (25) மருமகள் நிகில் (24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6:30 மணிக்கு தன்ராஜ் சௌத்ரியின் வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் இந்தியில் பேசியுள்ளனர். அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார்.

உடனே எதிர்பாராத விதமாக 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆஷா அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர், அந்த கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க், சிடி, ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் காரில் தப்பிச் சென்றுள்ளனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். 

கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற தன்ராஜ் சௌத்ரியின் கார் சீர்காழி அருகே உள்ள பட்ட விலாகம் பகுதியில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து,  கடலூர் மாவட்டம் எருக்கூர் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலத்தை சேர்ந்த மணிப்பால், மணிஷ், ரமேஷ் இளைஞர்களை 4 மணிநேரத்தில் தனிப்படை போலீசார் பிடித்தனர். அப்போது, கொள்ளையர்கள் தப்ப முயன்ற போது ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்களிடம் இருந்து  16 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

click me!