
கேரளாவில் கள்ளக்காதல் ஜோடி தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மரோட்டிச்சால் பகுதியை சேர்ந்தவர் சஜித் (32). அதே பகுதியை சேர்ந்தவர் பானூஷ் அவரது மனைவி அனிதா(33). நேற்று காலை 2 பேரும் திருச்சூர் அருகே சாலக்குடியில் உள்ள ஒரு லாட்ஜில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமைனக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரைணயில் அனிதாவுக்கு தனது உறவினரான சஜித்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, அனிதா கள்ளக்காதலன் சஜித்துடன் தமிழ்நாட்டிலிருந்து கேரளா வந்துவிட்டார். இந்நிலையில், கள்ளக்காதல் ஜோடி லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.