என்கவுண்டர் வழக்கில் ஆந்திர போலீசுக்கு சிக்கல்..!! கிடுக்குபிடி போடுகிறது நீதிமன்றம்..!!

Published : Dec 07, 2019, 11:46 AM IST
என்கவுண்டர் வழக்கில் ஆந்திர போலீசுக்கு சிக்கல்..!!  கிடுக்குபிடி போடுகிறது நீதிமன்றம்..!!

சுருக்கம்

இதை விசாரித்த நீதிபதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் வரும்  9 ஆம் தேதி மாலை 6 மணிவரை பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களையும் பதப்படுத்தி வைக்க தெலங்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா (26) , கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணிக்கு சென்று வீடு திரும்பிய போது அவரைப் பின்தொடர்ந்தார் நான்கு பேர் பாலியல் வல்லுறவு செய்து எரித்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அந்த வழக்கில் சின்ன கேசவலு ,  நவீன் ,  முகமது பாஷா ,  ஷிவா ,  ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர் நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலையில் 3 மணி அளவில் அவர்கள் தப்பியோட  முயன்றபோது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜன்னார்  தெரிவித்தார் ,  இதற்கு பல்வேறு தரப்பினர்  வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர் .  அதாவது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமல் காவல்துறையை சட்டத்தை கையில் எடுத்து என்கவுண்டர் செய்து கொன்றது  வன்முறை என மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர் . இந்நிலையில் என்கவுண்டர் குறித்து தெலுங்கானா நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

இதை விசாரித்த நீதிபதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் வரும்  9 ஆம் தேதி மாலை 6 மணிவரை பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர்.  மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ எடுத்து அதை குறுந்தகட்டில் அல்லது பென்ட்ரைவில் பதிவிட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் விசாரணையில் நாளை மறுதினத்திற்கு  ஒத்தி வைத்துள்ளனர்
 

PREV
click me!

Recommended Stories

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?