
இலங்கையில் காதலியை பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் பேருந்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில் நேற்று இரவு பஸ் ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண டிப்போவிற்கு சென்றனர். மேலும் சிலர் உணவு வாங்கவும் சென்றிருந்தனர். இதை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது, தனது பஸ் காணாமல் போனதை உணர்ந்த ஓட்டுநர் ஒருவர், பிலியந்தலை பொலீஸாருக்கு இதுக்குறித்து தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்கிய போது பயங்கரம்.. வெடித்து சிதறியதில் பெண் ரத்த வெள்ளத்தில் பலி
இதை அடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கெஸ்பேவ - பிலியந்தலை சந்திக்கு அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இருந்த பேருந்து செல்வதை கண்ட அதிகாரிகள் பேருந்தை தடுத்து நிறுத்தி தப்பியோட முயன்ற அந்த இளைஞரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது காதலியை பார்த்துவிட்டு திரும்பும் போது பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக அந்த வாலிபர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாக்டர் கணவன் மீது சலிப்பு.. பக்கத்து வீட்டு பையனுடன் காதல்.. அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்.
நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு தனது காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்ததாகக் கூறிய சிறுவன், பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பேருந்துகள் இயங்கவில்லை என்பதை உணர்ந்ததாகவும் டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் ஒன்றில் சாவி இருந்ததை கண்ட அவர், தனது காதலியை பார்ப்பதற்காக அந்த பேருந்தை எடுத்துச்சென்றதாக கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.