டாக்டர் கணவன் மீது சலிப்பு.. பக்கத்து வீட்டு பையனுடன் காதல்.. அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 12, 2022, 7:40 PM IST

மனைவி பக்கத்து வீட்டு இளைஞனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததை தட்டிக்கேட்ட கணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.


மனைவி பக்கத்து வீட்டு இளைஞனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததை தட்டிக்கேட்ட கணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

சமீபகாலமாக  திருமணத்திற்கு புறம்பான விவகாரத்தில் மனைவியால் கணவன்மார்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பொதுவாகவே கொலை, தற்கொலை போன்றவற்றின் பின்னணிகளை ஆராய்ந்தால் கள்ளக்காதல் மறைந்திருப்பது தெரியவருகிறது. அதாவது திருமண உறவில் நம்பிக்கை இழக்கும் கணவனோ மனைவியோ மூன்றாவது உறவையும் நாடும்போது இதுபோன்ற விபரீதம் நடக்கிறது.

Tap to resize

Latest Videos

தனிப்பட்ட இருவரின் சுகத்திற்காக ஒட்டுமொத்த குடும்பத்தின் கௌரவம் காற்றில் பறக்கவிடப்படும் அது மட்டுமின்றி பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆக்கப்படுகிறது, பெரும்பாலும் கள்ளக்காதலில் ஈடுபடுவோர் வாழ்க்கை மரணத்தில் முடிகிறது என்பதுதான் சோகம். இது போன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் தேவாரப் பள்ளி மண்டலம், சீதாராம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்எம்பி சுரேஷ், இவர் மருத்துவராக  பணியாற்றி வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரிதா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ் ஆர்.எம்.பி மருத்துவர் என்பதால் எந்த பிரச்சினையும் இன்றி குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது. ஆனால் திடீரென கணவன் மீது சலிப்பு ஏற்பட்ட மனைவி சரிதாவுக்கு பக்கத்துவீட்டு இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டது, அது நாளடைவில் நெருக்கமாக மாறி, இருவரும் தகாத உறவில் ஈடுபடத் தொடங்கினார். இதை அறிந்த கணவன் ரமேஷ் மனைவியை எச்சரித்தார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கணவன் சுரேஷ் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட சரிதா முடிவு செய்தார், காதலனுடன் சேர்ந்து கொலைக்கு திட்டமிட்டார் இந்நிலையில்தான் நடு இரவில் கணவனை கொன்ற சரிதா, சடலத்தை அருகிலிருந்த குளத்தில் வீசினார். இதையடுத்து சுரேஷின் சகோதரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் மனைவி மீது சந்தேகம் அடைந்த அவர்கள் அவரை பிடித்து விசாரித்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதுதொடர்பாக கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி சரிதா, மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 

click me!