பைக் வச்சு மடக்கி இருக்கோம், எதுவுமே இல்லையா? ஆத்திரத்தில் சிறுவனை தாக்கிய கொள்ளைர்கள்..!

By Kevin KaarkiFirst Published Apr 18, 2022, 11:43 AM IST
Highlights

இதை அடுத்து சிறுவனிடம் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்த சிறுவனை சரமாரியாக தாக்கினர். 

பெங்களூரு நகரின் ரிச்மண்ட் டவுன் அருகில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 16 வயது சிறுவன் அருகாமையில் உள்ள லாரெல் லேன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்று இருக்கிறார். அங்கு இரவு உணவை சாப்பிட்டு முடித்த பின் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். 

தொடக்கத்தில் இருந்து நீண்ட தூரம் பைக்கில் சிறுவனை பின்தொடர்ந்து வந்த இரு கொள்ளையர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுவனை சுற்றி வளைத்து, அவனிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கொடுக்க கட்டாயப்படுத்தினர். எனினும், தன்னிடம் எப்படி எந்த பொருளும் இல்லை என சிறுவன் கூறி வந்தான். 

தாக்குதல்:

சிறுவன் கூறுவதை ஏற்க மறுத்த கொள்ளையர்கள், சிறுவனின் சட்டை கிழித்து, அவனிடம் ஏதேனும் பொருட்கள் கிடைக்குமா என தேடினர். எனினும், சிறுவன் கூறியதை போன்றே அவனிடம் விலை உயர்ந்த பொருள் எதுவும் இல்லை என்பதை கொள்ளையர்கள் அறிந்து கொண்டனர். இதை அடுத்து சிறுவனிடம் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்த சிறுவனை சரமாரியாக தாக்கினர். 

பலத்த காயங்கள்:

இரண்டு கொள்ளையர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் சிறுவனக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிறுவனை ஆத்திரம் தீர அடித்த கொள்ளையர்கள் பின் அங்கிருந்து மின்னல் வேகத்தில் கிளம்பி சென்றனர். உடல் முழுக்க காயங்களுடன் வீட்டிற்கு விரைந்த சிறுவன் தனது சகோதரியிடம் நடந்ததை விவரித்தான். பின் சகோதரி சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

அங்கிருந்து இரண்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிறுவனுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயங்கள் காரணமாக சிறுவனுக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளன. பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுவன் தற்போது வீட்டில் இருந்தபடி உடல் நலம் தேறி வருகிறான். 

வழக்குப் பதிவு:

இந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் சம்பவம் அரங்கேறிய பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் குற்றவாளிகளை பிடிக்க திட்டமிட்டிள்ளனர். கொள்ளையர்களை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

"சில குழுக்கள் தனியார் கல்லூரிகள் உள்ள பகுதிக்கு சென்று, மாணவர்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமயங்களில் இதுபோன்ற பாதிப்புகளை மைனர்களே அதிகம் எதிர்கொள்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன,"  என்று தாக்கப்பட்ட சிறுவனின் உறவினர் அகமது அலி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

click me!