சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை.. ஜாமினில் வந்ததும் சர்ச்சை கருத்து... மீண்டும் சிக்கும் யதி நரசிங்கானந்த்?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 18, 2022, 10:18 AM IST
சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை.. ஜாமினில் வந்ததும் சர்ச்சை கருத்து... மீண்டும் சிக்கும் யதி நரசிங்கானந்த்?

சுருக்கம்

இங்கு நாங்கள் உண்மையை எடுத்துக் கூற விரும்புகிறோம், வன்மையான கருத்துக்கள் எதையும் நாங்கள் கூறவிவல்லை என அவர் தெரிவித்தார். 

இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த காரணத்தால் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கும் யதி நரசிங்கானந்த் மீண்டும் ஓர் சர்ச்சை கருத்தை தெரிவித்து இருக்கிறார். 

இமாச்சல பிரதேச மாநிலத்தின் உனா பகுதியில் நடைபெற்ற மத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட யதி நரசிங்கானந்த் ஜாமின் விதிகளை மீறி இருக்கிறார். இவர் கலந்து கொண்ட மத கூட்டத்தில் பேசியவர்கள் முஸ்லீம்களை தாக்க அனைவரும் ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை:

மத கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்த சத்யதேவ சரஸ்வதி, இது தனியார் நிகழ்ச்சி ஆகும். இதை நடத்த நாங்கள் யாரிடமும் அனுமதி கோர வேண்டிய அவசியம் இல்லை என தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். 

"நாங்கள் சட்டத்தின் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நாங்கள் யாரை பார்த்தும் பயப்படவில்லை... இங்கு நாங்கள் உண்மையை எடுத்துக் கூற விரும்புகிறோம், வன்மையான கருத்துக்கள் எதையும் நாங்கள் கூறவிவல்லை," என அவர் மேலும் தெரிவித்தார். 

ஜாமின் விதிகள்:

கைதாகி சிறையில் இருந்த யதி நரசிங்கானந்த் ஜாமின் கேட்ட போது, சர்ச்சை கருத்துக்கள் கூறும் நிகழ்ச்சி எதிலும் கலந்த கொள்ள கூடாது என தெரிவித்து இருந்தது. முன்னதாக இந்த மாத துவக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யதி நரசிங்கானந்த் முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.

யதி நரசிங்கானந்த் மீது மற்றும் ஓர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. எனினும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி இன்றி நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சுமார் 700 முதல் 800 பேர் கலந்து கொண்டனர். 

சர்ச்சை கருத்துக்கள்:

இம்முறை  நடைபெற்ற நிகழ்வில் சத்வி அன்னப்பூர்னா உள்பட பலர் சர்ச்சை கருத்துக்களை கூட்டத்தில் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சத்வி அன்னபூர்னா மீது வழக்குப்பதிவி செய்யப்பட்டு இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!