மாணவி பயின்று வந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனியாக அழைத்து சென்று மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
கோவை ஆர்.எஸ்.புரம் சின்மயா பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரனின் மகள் பொன் தாரணி(17). இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை பொன் தாரணி திடீரென கூறினார். இதனையடுத்து, அம்மணியம்மாள் பள்ளிக்கு மாறினார்.
இந்நிலையில், பெற்றோர் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்ட பொன் தாரணி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த போது பெற்றோர் கதவுவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கதாதால், சந்தேகமடைந்தனர். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து அழுது கதறினர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொன் தாரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மாணவி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் சிக்கியதாக கூறப்படுகிறது. அதில், யாரையும் சும்மா விடக்கூடாது' ரீதாவின் தாத்தாவையும், எலீசா சாறுவின் அப்பா, இந்த சார், யாரையும் சும்மா விடக்கூடாது என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதனிடையே மாணவி பயின்று வந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனியாக அழைத்து சென்று மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடமிருந்து தப்பவே மாணவி பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.