வலியால் துடித்த சிறுமியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரன்.. ஜெயிலில் செய்த காரியம்..!

Published : Nov 11, 2021, 01:03 PM IST
வலியால் துடித்த சிறுமியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரன்.. ஜெயிலில் செய்த காரியம்..!

சுருக்கம்

 சிறுமிக்கு நுங்கு வெட்டி தருவதாக கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றபோது வலியால் சிறுமி கதறியதாகவும், இதனால் கல்லை தூக்கி போட்டுக் கொன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

சேலம் மத்திய சிறையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கீழ்மாட்டையாம்பட்டி பூவான்வளவு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி 4ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மே 1ம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடிய போது அதே பகுதியை சேர்ந்த தறி தொழிலாளி தனபால் (24) என்பவர் சிறுமியை அழைத்துச் சென்ற தெரியவந்தது. பதற்றத்துடன் மகளை தேடினர். அப்பகுதியில் உள்ள மாமரத்தின் அருகே சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர், ஊர்மக்கள் கதறினர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுமியின் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து, அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்த தனபாலை போலீசார் கூற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறுகையில்;- சிறுமிக்கு நுங்கு வெட்டி தருவதாக கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றபோது வலியால் சிறுமி கதறியதாகவும், இதனால் கல்லை தூக்கி போட்டுக் கொன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, போக்சோ மற்றும் கொலை வழக்கில் தனபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், தனபால் மீது ஜூன் 5ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. 

இந்நிலையில், சிறையில் இருந்து செல்போன் வீடியோகால் மூலம் தாயிடம் பேசினார். தனபால் அப்போது தன்னை விரைவில் ஜாமீனில் எடுக்குமாறு கூறியுள்ளார். குண்டர் சட்டத்தில் கைது என்பதால் தாமதமாகும் என தாய் கூறியுள்ளார். இதனால் மிகுந்த அதிர்ச்சியுடன் அறைக்கு சென்றுள்ளார். பகல் 1.45 மணியளவில் துண்டை கிழித்து ஜன்னலில் கட்டி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை பார்த்த கைதிகள் சத்தம்போடவே வார்டன்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!