இந்திய கம்யூனிஸ்ட் முக்கிய நிர்வாகி பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

By vinoth kumarFirst Published Nov 11, 2021, 10:07 AM IST
Highlights

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ஒளிமதி கிராமத்தில் வசித்து வந்தவர் நடேச தமிழார்வன் (55). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர். இவரது மனைவி பழனியம்மாள். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி விட்டது. 

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ஒளிமதி கிராமத்தில் வசித்து வந்தவர் நடேச தமிழார்வன் (55). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர். இவரது மனைவி பழனியம்மாள். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் நடேச தமிழார்வன், கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். இதனால், காரில் இருந்து கீழே இறங்கியதும் மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியான வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே நடேச தமிழார்வன் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பினர்.

இதையும் படிங்க;-ஆடைகளை உருவி தினமும் அட்டகாசம்.. வலி தாங்க முடியாமல் உணவில் விஷம் வைத்த மனைவி.. ஜஸ்ட் மிஸில் தப்பிய கணவர்.!

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடேச தமிழார்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- கண்டவன்கிட்ட கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலி.. 45 வயது ஆண்டியால் 28 வயது இளைஞர் செய்த காரியம்..!

இதனிடையே, குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுனர். மேலும், அவ்வழியாக சென்ற  அரசு பேருந்து, லாரி கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தினர். அங்கு நின்ற இருசக்கர வாகனத்தையும் தீ வைத்து எரித்தனர். இதனால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

click me!