மோசடிக்காரனுடன் பார்ட்னரான போலீஸ் ஐஜி சஸ்பெண்ட்... சிக்கும் போலீஸ் அதிகாரிகள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 10, 2021, 5:21 PM IST
Highlights

ஜனவரி 1 ஆம் தேதி கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ஏடிஜிபி) பதவி உயர்வு அளிக்கப்பட இருந்தது.

போலி கலைப்பொருட்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் மான்சன் மாவுங்கலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) ஜி லக்ஷ்மணனை கேரள அரசு இடைநீக்கம் செய்துள்ளது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு இருந்ததால் கேரள ஐஜியின் இடைநீக்கத்தில் முதல்வர் பினராயி விஜயன் கையெழுத்திட்டார். கடந்த மாதம், கேரள காவல்துறையின் முன்னாள் தலைமை டிஜிபி லோக்நாத் பெஹெரா மற்றும் தற்போதைய மாநில காவல்துறைத் தலைவர் டிஜிபி அனில்காந்த் உள்ளிட்ட மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் மோன்சன் மவுன்கல் தொடர்பு கொண்டிருந்ததாக சில புகைப்படங்கள் வெளியாகின. 

அதன்படி மான்சன் மோசடியில் ஐஜி லட்சுமணா ஈடுபட்டதாகவும், நடந்து வரும் விசாரணையை நாசப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், திருவனந்தபுரம் போலீஸ் கிளப்பில் விருந்தினராக தங்கியிருந்த மோன்சன் மவுன்கல், போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு எதற்காகத் தங்கினார் என்பது தெளிவாகியது. மான்சன் மவுன்கலின் தொழில் பங்குதாரராக ஆந்திராவைச் சேர்ந்த இடைத்தரகர்களுடன் ஐஜி லட்சுமணா தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஐஜி லக்ஷ்மணா கேரளாவின் மிக மூத்த ஐஜி ஆவார். மேலும் ஜனவரி 1 ஆம் தேதி கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ஏடிஜிபி) பதவி உயர்வு அளிக்கப்பட இருந்தது. குற்றப்பிரிவு ஐஜி லட்சுமணா மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.மோன்சன் மவுன்கல் வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசிடம் கேள்வி எழுப்பியது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 52 வயதான மோன்சன் மாவுங்கல் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த பல ஆண்டுகளாக கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை சேகரிப்பது போல் நடித்து மக்களிடம் ரூ.10 கோடி வரை மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மோன்சன் மாவுங்கலுடன் பல அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

click me!