வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த தம்பதி; மூதாட்டியை கொன்று செயின் பறிப்பு

By Velmurugan s  |  First Published Apr 1, 2024, 11:17 PM IST

ஓசூரில் வீடு வாடகைக்கு பார்க்க வருவது போல் வந்த தம்பதி தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது தாயார் சரளாதேவி (வயது 67). சுப்பிரமணி ஓசூர் மகாத்மா காந்தி சாலையில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்தோடு அவரது வீட்டின் இரண்டாவது தளத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ள வீடு வாடகைக்கு விடப்படும் என செல்போன் எண்ணுடன் அந்த பகுதியில் விளம்பரம் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து வீடு வாடகைக்கு தேவை என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தம்பதி இவர்களது வீட்டுக்கு சென்றுள்ளனர். 

பக்கத்துவீட்டு கதவை தட்டி பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த ஆசாமி; அதிர்ச்சியில் அலறிய குடும்ப பெண்

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் இன்று மதியம் சுப்பிரமணியின் மனைவி பேன்சி கடைக்கு சாப்பாடு எடுத்து சென்றுள்ளார். அப்போது சரளாதேவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் சுப்பிரமணியின் வீட்டின் மேல் தளத்திற்கு வீடு வாடகைக்கு கேட்பதுபோல  சென்ற ஆண், பெண் என இரண்டு பேர் சரளாதேவியுடன் பேச்சு கொடுத்து வீட்டை பார்த்துள்ளனர். அவரும் வாடகைக்கு விடப்படும் வீட்டை சுற்றி காண்பித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென சரளாதேவியை அந்த ஆண், பெண் இருவரும் சரமாரியாக தாக்கி அவரது வாய்க்குள் துணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். 

சரளாதேவி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை சிசிடிவி கேமரா காட்சி வழியாக செல்போனில் பார்த்த பெங்களூருவில் வசிக்கும் அவரது மகள் உடனடியாக அவரது தம்பி சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். கடையில் இருந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உடனடியாக வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வாயில் துணி வைத்து மயங்கிய நிலையில் கிடந்த சரளாதேவியை அவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஓசூர் நகர போலீசார் அப்பகுதி சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

திமுக ஆட்சி தமிழகத்திற்கே ஒரு சாபக்கேடு; பிரசாரத்தின் போது மத்திய இணை அமைச்சர் காட்டம்

தொடர்ந்து சுப்பிரமணியின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவரது வீட்டிற்கு இரண்டு பேர் வருவதும், பின்னர் அங்கிருந்து வேகமாக ஓடி செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. 

இந்த காட்சிகளை வைத்து போலீசார் மூதாட்டியை கொலை செய்து தங்க நகையை பறித்து சென்ற ஆண், பெண் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தம்பதிகளா அல்லது இதுபோல மக்களை ஏமாற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!