கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (36). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அனுஜா தன்னுடன் பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
கேரளாவில் ஆசிரியை அனுஜா மற்றும் ஹாசிம் ஆகிய இருவரும் காரை லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (36). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அனுஜா தன்னுடன் பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் சுற்றுலா சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனத்தை கொட்டாரக்கரை அருகே அனுஜாவின் ஆண் நண்பர் ஹாசிம் (35) என்பவர் வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்பு தனது காரில் ஆசிரியை அனுஜாவை வலுக்கட்டாயமாக அவர் அழைத்து சென்றுள்ளார்.
இதனால் பதறிப்போன சக ஆசிரியர்கள் சிறிறு நேரம் கழித்து அனுஜாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது அவர் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று அழுதபடி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரையும் தேடிச் சென்றது மட்டுமல்லாமல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்களது கார் கண்டெய்னர் லாரி மீது மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த செய்தியை கேட்டு சக ஆசிரியர்கள் அதிர்ச்சிடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்தில் பலியான இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் அனுஜா மற்றும் ஹாசிம் ஆகிய இருவரும் காரை கண்டெய்னர் லாரியில் மோதி தற்கொலை செய்திருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.