சென்னையில் அதிர்ச்சி.. பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை.. பகீர் சிசிடிவி காட்சிகள்.!

By vinoth kumar  |  First Published Mar 31, 2024, 7:01 AM IST

சென்னை தி.நகர் மேட்லி  2வது தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி(57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.


சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப்பகலில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகர் மேட்லி  2வது தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி(57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி வேளச்சேரியில் உள்ள இடத்தை விற்பது தொடர்பாக தனது நண்பர் ராம்குமார்(50) என்பருடன் வேளச்சேரி செல்வா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென பழனிசாமியை மடக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஃபாரினில் மலர்ந்த கள்ளக்காதல்.. சூட்கேசில் அடைத்து இளம்பெண் கொலை.. வெளியான பரபரப்பு தகவல்..!

இதனை தடுக்க முயன்ற நண்பர் ராம்குமாரை அரிவாளை காட்டி மிரட்டி துரத்திவிட்டனர். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  உடனே இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ஜிம்முக்கு வரும் பெண்களை ஜம்முன்னு கரெக்ட் செய்த மிஸ்டர் வேர்ல்ட்! அடங்காத சேட்டை! யார் இந்த மணிகண்டன்?

பின்னர் தரமணி போலீசார் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பழனிசாமியின் நண்பர் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக பழனிசாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனிடையே ரியல் எஸ்டேட் அதிபர் பழனிசாமி வெட்டிக் கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

click me!