குளிக்கும்போது மறைந்திருந்து வீடியோ எடுத்த மாணவர்கள்…. திருச்சி அருகே ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை!!

By Selvanayagam PFirst Published Nov 13, 2018, 7:20 AM IST
Highlights

திருச்சி அருகே பள்ளி ஆசிரியை குளிப்பதை, கடந்த 2 ஆண்டுகளாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய 3 மாணவர்களை போலீசார்  கைது செய்துள்ளனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி அடுத்த ஆவாரம் பட்டியைச் சேர்ந்தவர் ஜான்சி இவர் அங்குள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிய்ற்றி வருகிறார். அவரின் கணவர் வெளியூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீடு  சற்று ஒதுக்குப் புறமாக உள்ளது, மேலும் அந்த வீட்டின் பாத்ரூம் ஜன்னலின்  வெண்டிலேசன் வெளிப்புறமான உள்ளது போல் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியை குளித்துக் கொண்டிருக்கும் போது வெண்டிலேசன் ஜன்னல் கண்ணாடியில் ஒரு கை தெரிந்துள்ளது. இதை பார்த்து ஆசிரியை சத்தமிட்டதால் அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து அந்த ஆசிரியை அங்கங்களை வர்ணித்தும், உடலில் எந்தெந்த இடத்தில் மச்சம் உள்ளது என்று குறிப்பிட்டும், இது தொடர்பாக யாரிடமாவது புகார் தெரிவித்தால் குளிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை முக நூல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு விடுவோம் என்று எச்சரித்தும் துண்டு சீட்டு ஒன்றை ஆசிரியையின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் வீசி சென்றனர்.

இதனால் மிரண்டு போன ஆசிரியையும் அவரது கணவரும், வையம்பட்டி காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் அந்த மிரட்டல் கடிதத்தையும் சந்தேகத்துக்கு இடமான பக்கத்து வீட்டு மாணவனின் நோட்டில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். அவை இரண்டும் ஒரே மாதிரி இருந்தது.

இதையடுத்து அந்த மாணவனிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் படிக்கின்ற மேலும் 2 மாணவர்களும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக  ஆசிரியை குளிப்பதை திருட்டு தனமாக பார்த்து ரசித்ததாகவும், ஒரு கட்டத்தில் செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து வந்ததாகவும் தெரிவித்தான்.

இதையடுதது  அந்த 3 மாணவர்களையும் கைது செய்த காவல்துறையினர் அந்த மாணவர்களிடம் இருந்து செல்போன்களையும், ஆசிரியையின் வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டையும் பறிமுதல் செய்தனர்

click me!