
மதுரை அடுத்த பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாலபட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான வீரன் என்பவர் அவரது வீட்டின் அருகே 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மதுரை வீரனின் மகளுக்கு மு.க.அழகிரி தலைமையில் தான் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மு.க.அழகிரி மதுரை வீரன் போன்ற வீரர்கள் என்னுடன் இருக்கும்போது என்னை யாரும் அசைக்க முடியாது என பெருமையாகக் கூறினார். இந்நிலையில் மதுரை வீரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது அழகிரி ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்விரோத காரணமாக கொலை நடைபெற்றதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே மதுரையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.