தர்மபுரி அருகே பிளஸ் 1 மாணவியை கற்பழிக்க முயற்சி….வெறியர்களின் தாக்குதலில் மாணவி உயிரிழந்த பரிதாபம்….

Published : Nov 10, 2018, 07:22 PM IST
தர்மபுரி அருகே பிளஸ் 1  மாணவியை கற்பழிக்க முயற்சி….வெறியர்களின் தாக்குதலில் மாணவி உயிரிழந்த பரிதாபம்….

சுருக்கம்

தர்மபுரி அருகே அரூரில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை  2 பேர் தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்றபோது, அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த  அவர்கள மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு, பிளஸ் 1 படிக்கும் மாணவி மாணவி ஒருவர் தனியாக நடந்து  சென்றுள்ளார்.  அப்போது அவரை  2 இளைஞர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது அந்த இருவரும் அந்த மாணவியை  அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். பாலத்கார முயற்சியின் போது மாணவி தப்பிக்க முயன்றார். மேலும் அந்த மாணவி கூச்சலிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும்  மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு பின்னர்  மீண்டும் அவர்கள் மாணவியை பாலாத்காரம் செய்ய முயன்ற போது ஆள் வரும் சத்தம் கேட்டதால் அப்படியே விட்டு ஓடிவிட்டனர்.

இதையடுத்து அவ்வழியாகச் சென்ற சிலர் அந்த மாணவியை  மோசமான நிலையில்  தர்மபுரி அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் நடந்து முடிந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்த மாணவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பலாத்கார முயற்சி மற்றும் கொலை என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் சதீஷ்  என்ற இருவரையும் போலீசார் மேடி வருகின்றனர்.

இதில் கொடுமை என்னவெனில் ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் அந்த மாணவியின் உறவினர்கள் என கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தது, தருமபுரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்