தருமபுரி அருகே பாலியல் வன்கொடுமை... சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழப்பு!

Published : Nov 10, 2018, 02:06 PM IST
தருமபுரி அருகே பாலியல் வன்கொடுமை... சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழப்பு!

சுருக்கம்

தருமபுரி அருகே தீபாவளியன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி 12-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி அருகே தீபாவளியன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி 12-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த வழக்கில் சதீஷ், ரமேஷ் ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்தவர் கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளியன்று இரவில் மாணவியை பின்தொடர்ந்த 2 நபர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

இதில் படுகாயமடைந்த மாணவி கோமதி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாணவி கோமதி சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்