பிரபல ரவுடியை கொடூரமாக கொலை செய்து இதயத்தை வெட்டி சென்ற கொலையாளிகள்...

Published : Nov 09, 2018, 05:53 PM IST
பிரபல ரவுடியை கொடூரமாக கொலை செய்து இதயத்தை வெட்டி சென்ற கொலையாளிகள்...

சுருக்கம்

ஆந்திராவில் பிரபல ரவுடியை கொலை செய்து விட்டு அவரது இதயத்தை தனியாக வெட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், சாய்பாபா சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சென்னய்யா. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக திருந்தி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று அதிகாலை துங்கபத்ரா நதிக்கரையில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதில் சென்னய்யாவை கொலை செய்து அவரது இதயத்தை அறுத்து எடுத்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறகு கொலை செய்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கினர். முற்கட்ட விசாரணையில் கொலை முன் பகையால் நடத்திருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கொலை செய்யப்பட்ட சென்னய்யாவிற்கும் மற்றொரு ரவுடி கும்பலுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன் சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சென்னய்யா திருந்தி கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ரவுடியை கொலை செய்து இருதயத்தை அறுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்