Coimbatore: பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை.. பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது.!

By vinoth kumarFirst Published Nov 14, 2021, 10:17 AM IST
Highlights

2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பெங்களூரில் தலைமறைவாக இருந்த  சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரனின் மகள் பொன் தாரணி(17) ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். திடீரென 2 மாதங்களுக்கு முன்பு  மாநகராட்சி பள்ளியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு அப்பள்ளியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. வேறு பள்ளி மாறியும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க; ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் அவர்களே கீழ்த்தரமான செயலில் ஈடுபடலா.. எரிமலை வெடிக்கும் ராமதாஸ்.!

மேலும், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தொடர்பாக மாணவி மற்றும் பெற்றோர் புகார் அளித்தும் அப்பள்ளியை சேர்ந்த முதல்வர் மீரா ஜாக்சனிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றம்சாட்டும் எழுந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மாணவியின் தற்கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று கோவையில் உள்ள மாணவியின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க;- SexualHarassment:மேலாடையை கழட்ட சொல்லி ஆசிரியர் பாலியல் தொல்லை.. அவமானம் தாங்க முடியாமல் பள்ளி மாணவி தற்கொலை.!

இந்நிலையில், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை பிடிக்க  2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் பெங்களுரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு  பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் அழைத்து வரப்படுகிறார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

click me!