சாதி வாரியாக கலர் கயிறு.. சண்டையில் பள்ளி மாணவர் பலி.. 3 பேர் மீது கொலை வழக்கு !

Published : Apr 30, 2022, 01:50 PM IST
சாதி வாரியாக கலர் கயிறு.. சண்டையில் பள்ளி மாணவர் பலி.. 3 பேர் மீது கொலை வழக்கு !

சுருக்கம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் - உச்சிமாகாளி தம்பதி.  இவர்களுக்கு செல்வ சூர்யா என்ற மகளும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.  

செல்வ சூர்யா இடைகாலை அடுத்த பள்ளக்கால் பொதுக்குடியில்  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி செல்வ சூர்யாவுக்கும்,  அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இடையே சாதி கயிறு  தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.  இந்த மோதலில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள்  செல்வசூர்யாவை  கல்லால் தாக்கியுள்ளனர்.  

இதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் உடனடியாக செல்வசூர்யா அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 25-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வசூரியன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இது தொடர்பாக அதே பள்ளியில் பயிலும் +1 மாணவர்கள் 3 பேர் மீது பாப்பாக்குடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மாணவர்களிடையே சாதி மோதல் ரீதியிலான இக்கொலையானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவன் செல்வசூரியன் மீது பெல்ட் மற்றும் கற்கள் கொண்டு தாக்கியதால் தலையில் அடிபட்டு, பின் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஆப்ரேசன் 2.0 - ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்.! தட்டி தூக்கிய பாஜக.. இலங்கைக்கு அண்ணாமலை ‘திடீர்’ விசிட்! 

இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!