நூல் கட்டுகளில் போதை பொருள்... அதிகாரிகள் சாமர்த்தியத்தால் ரூ. 450 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 30, 2022, 12:48 PM IST
நூல் கட்டுகளில் போதை பொருள்... அதிகாரிகள் சாமர்த்தியத்தால் ரூ. 450 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

சுருக்கம்

ஆய்வின் போது கண்டெயினரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நூல் கட்டுகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர். பின் அதை சோதனை செய்தனர்.

இந்தியாவில் போது பொருள் புழக்கம் சமீப காலங்களில் பெருமளவு அதிகரித்து விட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்படும் சோதனைகளில் அதிகளவிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர தங்கம் மற்றும் இதர பொருட்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா கொண்டு வரும் வழக்கமும் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் தீவிரவாத தடுப்பு படை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சார்பில் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில் 90 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 450 கோடி ஆகும். ஈரானில் இருந்து பிபாவாவ் துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்த கண்டெயினரில் இருந்து இவ்வளவு ஹெராயின் மீட்கப்பட்டது.

ஹெராயின் கண்டுபிடிப்பு:

அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க ஹெரியானை இரசாயனம் ஒன்றில் கரைத்து, அதனை நூல் கட்டுகளில் கலந்து வைத்திருந்தனர். ஆய்வின் போது கண்டெயினரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நூல் கட்டுகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர். பின் அதை சோதனை செய்த போது, ஹெராயின் கலந்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஈரானில் இருந்து சுமார் ஐந்து மாதங்களுக்கு முன் பிபாவாவ் துறைமுகத்திற்கு வந்த கண்டெயினரில், பெரிய பைகளில் நூல் கட்டுகள் இருந்தன. சந்தேகத்திற்கு இடமான வகையில் நான்கு பைகளில் சுமார் 395 கிலோ எடை கொண்ட நூல் கட்டுகள் இருந்தன. நூல் கண்டுகளில் ஹெராயின் ஊற வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்து 90 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டு உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 450 கோடி ஆகும்," என குஜராத் காவல் துறை இயக்குனர் அசிஷ் பாட்டியா தெரிவித்தார். 

பறிமுதல் நடவடிக்கை:

ஹெராயின் கொண்டு ஊற வைக்கப்பட்ட நூல் க'்டுகள் சாதாரண நூல் கண்டுகளுடன் வைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என அவர்கள் நினைத்திருந்தனர். ஹெராயின் நூல் கட்டுகள் சாதாரண நூல் கட்டுகளைக் கொண்ட பைகளுடன் வைக்கப்பட்டு இருந்த போதிலும், கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு சட்டம் 1985-இன் கீழ் டி.ஆர்.ஐ. மூலம் ஆய்வு மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!