அதிர்ச்சி சம்பவம்..! பார்ட்டியில் நண்பர்களுடன் போதை.. ஆசனவாயில் டம்ளரை சொருகிய நண்பர்கள்

Published : Aug 22, 2022, 05:09 PM ISTUpdated : Aug 22, 2022, 10:04 PM IST
அதிர்ச்சி சம்பவம்..! பார்ட்டியில் நண்பர்களுடன் போதை.. ஆசனவாயில் டம்ளரை சொருகிய நண்பர்கள்

சுருக்கம்

குஜராத் மாநிலம், சூரத்தில் பணிபுரியும் 45 வயதான கிருஷ்னா ரௌத், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒடிஷாவின், பெர்ஹாம்பூர் நகரத்தில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவமனைக்கு வந்திருந்த ஒருவர், நோயாளியாக சேர்ந்தார். எதற்காக சேர்ந்தார் என்று கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குஜராத் மாநிலம், சூரத்தில் பணிபுரியும் 45 வயதான கிருஷ்னா ரௌத், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றிருந்தார். அந்த  பார்ட்டியின் போது எல்லோரும் மிகவும் அதிகமாக மது அருந்தி இருந்தனர் என்று கூறப்படுகிறது. ​​

மேலும் செய்திகளுக்கு..யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!

போதையில் இருந்த அவரது நண்பர்கள் ஆசனவாயில் இரும்பு டம்ளரை செருகியுள்ளனர். அடுத்த நாளிலிருந்து கிருஷ்னா ரௌத் தனது குடலின் கீழ் வலியால் அவதிப்பட ஆரம்பித்தாலும், இதை அவர் தனது குடும்பத்தினரிடம் இதுபற்றி தெரிவிக்கவில்லை. வலி தாங்க முடியாமல் சூரத்தை விட்டு வெளியேறி கஞ்சத்தில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பினார்.

அவர் தனது கிராமத்தை அடைந்தபோது, ​​​​வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு, அவரால் மலம் கழிக்க முடியவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில், கிருஷ்னா ரௌத் எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார். முதலில் மலக்குடல் வழியாக இரும்பு டம்ளரை எடுக்க மருத்துவர்கள் முயன்றனர். இருப்பினும், அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்.. சர்ச்சையில் சிக்கிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் சரண் பாண்டாவின் ஆலோசனையின் பேரில், உதவிப் பேராசிரியர் சஞ்சித் குமார் நாயக், டாக்டர் சுப்ரத் பரல், டாக்டர் சத்யஸ்வரூப் மற்றும் டாக்டர் பிரதீபா ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை செய்தது. அவர்கள் குடலை வெட்டி இரும்பு டம்ளரை மீட்டனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த நபர் குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..இந்தியாவின் டாப் தலைவர் டார்கெட்.. திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ்! தீவிரவாதி கைது.. யார் அந்த தலைவர் ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!