பாவி.. பாவி.. சாமிக்கு மாலை போட்டு குடிக்கலாமா.. கண்டித்த தாயை ஆத்திரம் தீர பாட்டில் குத்திக்கொன்ற மகன்.!

By vinoth kumar  |  First Published Feb 11, 2023, 11:40 AM IST

 சிவராத்திரி வர இருப்பதால் சாமிக்கு மாலை போட்டுக் கொண்டால் மகன் குடிக்காமல் திருந்தி விடுவான் என்ற எண்ணத்தில் மாலை அணிந்து மகனை திருத்த தாய் முயற்சித்தார். மாலை அணிந்ததால் சில நாட்களாக மது அருந்தாமல் இருந்துள்ளார். 


சென்னையில் சிவராத்திரியையொட்டி சிவனுக்காக மாலை போட்டுக் கொண்டு மது அருந்தியதால் தட்டி கேட்ட தாயை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் அப்புனு (50). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது  மனைவி கண்ணகி (45). இவர்களுக்கு அஜய் (எ) லூசு அஜய் (22) என்ற மகன் உள்ளார். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. குடிக்க பணம் கேட்டு தாயிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், சிவராத்திரி வர இருப்பதால் சாமிக்கு மாலை போட்டுக் கொண்டால் மகன் குடிக்காமல் திருந்தி விடுவான் என்ற எண்ணத்தில் மாலை அணிந்து மகனை திருத்த தாய் முயற்சித்தார். மாலை அணிந்ததால் சில நாட்களாக மது அருந்தாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அணிந்து கொண்டே மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை தாய் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த லூசு அஜய் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து தாயின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக குத்தியுள்ளார். 

இதில், அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததும்  லூசு அஜய் அங்கிருந்து தப்பினார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  தப்பி ஓடிய லூசுஅஜயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!