கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்... உல்லாசத்திற்காக பெற்ற மகனை கொன்று நாடகமாடிய தாய்க்கு ஆயுள்..!

By vinoth kumarFirst Published Mar 25, 2021, 5:45 PM IST
Highlights

சேலம் அருகே கள்ளக்காதலுக்காக பெற்ற மகனை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு காணாமல் போனதாக நாடகம் ஆடிய வழக்கில் இளம்பெண்ணணுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சேலம் அருகே கள்ளக்காதலுக்காக பெற்ற மகனை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு காணாமல் போனதாக நாடகம் ஆடிய வழக்கில் இளம்பெண்ணணுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி எஸ்.பாப்பாரப்பட்டியை  சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மைனாவதி(26). இவர்களுக்கு சசிகுமார், அகிலன் 2 மகன்கள். இளைய மகன் அகிலன் இருசனாம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் மைனாவதி விட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி வீட்டில் இருந்த மகன் சசிகுமாரை காணவில்லை. சசிகுமார் அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, மைனாவதி பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. பள்ளி சென்ற மகனை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறும் அவர் கண்ணீர் மல்க பேசிய ஆடியோ எல்லோர் மனதையும் உருக்கியது. இந்நிலையில், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பிச்சம்பாளையத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிறுவன் சசிகுமாரின் உடல் மிதந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அவரது தாயிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் மகனை கொன்றதை ஒப்புக்கொண்டார். 

அதே ஊரை சேர்ந்தவர் தேவராஜ் இவர் மணிகண்டனின் நண்பர். அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதால் மைனாவதிக்கும், தேவராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், குழந்தையை கொன்றுவிட்டு  கள்ளக்காதலனுடன் வாழலாம் என்ற ஆசையில் மகன் சசிகுமாரை கிணற்றில் தள்ளி கொன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்பதால் காணாமல் போனதாக நாடகம் ஆடியதும் தெரியவந்தது. இதற்கு முக்கிய காரணம் கள்ளக்காதலன் என போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, மைனாவையும், தேவராஜையும்  போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமஜெயம் தாய் மைனாவதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். போதிய ஆதாரம் இல்லை என கூறி கள்ளக்காதலன் தேவராஜ் விடுதலை செய்யப்பட்டார். 

click me!