கணவர் உயிரிழந்த நிலையில் குழந்தை பெற்ற பெண்... அண்ணியை வெட்டி படுகொலை செய்த மைத்துனர்...

Published : Mar 23, 2021, 05:25 PM ISTUpdated : Mar 23, 2021, 05:26 PM IST
கணவர் உயிரிழந்த நிலையில் குழந்தை பெற்ற பெண்... அண்ணியை வெட்டி படுகொலை செய்த மைத்துனர்...

சுருக்கம்

ஒட்டப்பிடாரம் அருகே கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில் குழந்தை பெற்ற பெண்ணை மைத்துனர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒட்டப்பிடாரம் அருகே கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில் குழந்தை பெற்ற பெண்ணை மைத்துனர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையை அடுத்த சிந்தலக்கட்டை கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி ராமலட்சுமி (45). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சின்னத்துரை உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் ராமலட்சுமி கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது, ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால், ராமலட்சுமியிடம் குழந்தைக்கு யார் தந்தை கேட்டு கொம்பன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ராமலட்சுமி தனக்கு பிறந்த குழந்தையை யாருக்கும் காட்டாமல் தனக்கு தெரிந்தவர்களுக்கு தத்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியிடம் கொம்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கொம்பன் ராமலட்சுமியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராமலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  ராமலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தலைமறைவாக உள்ள கொம்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!