அட கொலைக்கார பாவி... திருமணமான ஒரு மாதத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூர கணவர்..!

திருவள்ளூர் அருகே திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newly married woman murder...husband arrest

திருவள்ளூர் அருகே திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(35). ஆட்டோ ஓட்டுநர். இவர் சென்னை ஆலந்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்போது அவருக்கும் ஆலந்தூர் பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமாணமாகி விவாகரத்து பெற்ற மகேஸ்வரி (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி கோபி, மகேஸ்வரியை பெரியபாளையம் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

Latest Videos

newly married woman murder...husband arrest

இதனையடுத்து, இருவரும் மேல்நல்லத்தூர் கிராமத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். ஆனாலும், ஆத்திரம் அடங்காத கோபி மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.

நள்ளிரவு 12 மணியளவில் எழுந்த கோபி தூங்கி கொண்டிருந்த மனைவி மகேஸ்வரியின் கழுத்தை கத்தியால் கரகரவென அறுத்தார். இதில், ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், கோபி காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அப்போது மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரு மாதத்தில் மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image