நினைச்சாலே நெஞ்செல்லாம் பதறுதே... பெண் கொடுக்கலைன்னு 8 மாத பச்சிளம் குழந்தையை வெட்டிக்கொன்ற படுபாவி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 20, 2021, 01:56 PM ISTUpdated : Mar 20, 2021, 02:00 PM IST
நினைச்சாலே நெஞ்செல்லாம் பதறுதே... பெண் கொடுக்கலைன்னு 8 மாத பச்சிளம் குழந்தையை வெட்டிக்கொன்ற படுபாவி...!

சுருக்கம்

குழந்தை மீது அரிவாள் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. 

பெண் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் 8 மாத பச்சிளம் குழந்தை வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள மகிழடியைச் சேர்ந்த செவிலியர் ரோஸ்பிளசியும், பணகுடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவசங்கரனும் காதலித்து வந்துள்ளனர். தன் வீட்டுக்கு முறைப்படி வந்து பெண் கேட்டு வருமாறு ரோஸ் பிளசி கூறியதை அடுத்து, சிவசங்கரனும் பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். ரோஸ் பிளசியை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும் படி அவருடைய தந்தை ரசல் ராஜிடம் சிவசங்கரன் கேட்டுள்ளார். 

தனது மகளை சிவசங்கரனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது என ரசல் ராஜ் கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரசல் ராஜை வெட்ட முயன்றுள்ளார். அப்போது ரசல் ராஜின் கையில் இருந்த அவருடைய பேத்தியான 8 மாத பெண் குழந்தை அக்‌ஷயா குயின் மீது வெட்டு விழுந்துள்ளது. 

இதில் குழந்தை மீது அரிவாள் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. அதன் பின்னரும் ஆத்திரம் தீராத சிவசங்கரன் ரசல் ராஜையும், அவருடைய மனைவியையும் வெட்டியுள்ளார். அங்கிருந்து தப்பியோடிய சிவசங்கரனை போலீசார் தேடி வருகின்றனர். ரசல் ராஜின் மூத்த மகளான ஏஞ்சலின் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் குழந்தையை தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர விட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி