அடத்தூ.. யாரும் இல்லாதபோது மாமியாருடன் அசிங்கம் செய்த மருமகன்.. 5 ஆண்டு சிறை 10 ஆயிரம் அபராதம் விதித்த கோர்ட்.

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2022, 7:37 PM IST
Highlights

மாமியாரை பாலியல் வன்புணர்வு செய்த மருமகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை 10 ஆயிரம் அபராதம் விதித்து ஓங்கோல்  இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.ஏ சோமசேகர்  தீர்ப்பளித்துள்ளார். 

மாமியாரை பாலியல் வன்புணர்வு செய்த மருமகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை 10 ஆயிரம் அபராதம் விதித்து ஓங்கோல்  இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.ஏ சோமசேகர்  தீர்ப்பளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, காமவெறி பிடித்த சிலர் உறவு முறைகளை மீறி பாலியல் கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வரிசையில் சரி பாலியல் வன்கொடுமை செய்த மருமகனே நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

முழு விவரம் பின்வருமாறு:-  ஆந்திர மாநிலம் சிராஸை சேர்ந்த ஒரு பெண் செருப்பு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலா ஜான் என்பவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார்.

இதையும் படியுங்கள்: கணவன் மீது ஏற்பட்ட அலுப்பு.? தனியா வீடு எடுத்து காதலன் உடன் என்ஜாய் செய்த மனைவி.. கழுத்தை அறுத்து கொலை.

இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணம் நடந்த சில ஆண்டுகள் வாழ்க்கை அமைதியாக சென்றது, ஆனால் மருமகன் கோலா ஜான்  வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார், இதனை அடுத்து அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றார், இந்நிலையில்தான் மாமியார் வீட்டுக்குச் சென்ற கோலா ஜான் மாமியாரை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது, பின்னர் அங்கேயே தங்கி இருந்த அவர் வீட்டில் மாமியார் தனிமையில் இருந்தபோது அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: போலீஸ் எச்சரித்தும்.. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. சவால் விட்ட ஓலை சரவணனை சமாதியாக்கிய கும்பல்.!

பின்னர் அவரிடமிருந்து தப்பித்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதன்பின்னர் கணவருடன் சேர்ந்து தன்னை மானபங்கப் படுத்திய மருமகன் மீது சேலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

பின்னர் இதுகுறித்து போலீசார்  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது கோலா ஜான் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறிய மாவட்ட இரண்டாவது செஷன்ஸ் நீதிமன்றம்  மருமகன் கோலா ஜானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. 

அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!