மேற்கு வங்கத்தில் இருந்து ஓடிவந்த காதல் ஜோடி.. சென்னை திருவல்லிக்கேணி விடுதியில் அழுகிய நிலையில் மீட்பு.

Published : Sep 07, 2022, 06:03 PM IST
மேற்கு வங்கத்தில் இருந்து ஓடிவந்த காதல் ஜோடி.. சென்னை திருவல்லிக்கேணி விடுதியில் அழுகிய நிலையில் மீட்பு.

சுருக்கம்

சென்னை திருவல்லிக்கேணியில் காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த காதலன் காதலி இருவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.    

சென்னை திருவல்லிக்கேணியில் காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த காதலன் காதலி இருவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான கொலை தற்கொலைகள் காதல், கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறுகின்றன. பெண்கள் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபடுப் பட்சித்தில் அது கொலையில் முடியுகிறது, இதேபோல் சாதி மாறி திருமணம் செய்யும் போது பெண்ணின் குடும்பத்தாரால் கவுரவக் கொலைகள் அரங்கேறுகிறது.  ஆனால் இங்கு காதலுக்கு பெற்றோர்கள் அனுமதிக்காததால் காதலியைக் கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம்  அரங்கேறியுள்ளது.

இதையும் படியுங்கள்: கணவன் மீது ஏற்பட்ட அலுப்பு.? தனியா வீடு எடுத்து காதலன் உடன் என்ஜாய் செய்த மனைவி.. கழுத்தை அறுத்து கொலை.

சென்னை திருவல்லிக்கேணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  மாவட்ட செயலாளர் செல்லதுரை என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கிச் செல்கின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரசஞ்சித் கோஷ் ,  மொத்தம் அவரது காதலி அர்பிதா பால் ஆகியோர் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். ஆனால் அவர்களின் அறைக்கதவு கடந்த 4 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் விடுதியின் பணியாளர் சிவா அறை வழியாக சென்றார்.

இதையும் படியுங்கள்: திருமணம் ஆகி 5 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படியா ? கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி

அப்போது  அறைக்கு வெளியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர், அறை கதவை உடைத்து பார்த்தபோது அர்பிதா பால் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதேபோல் பிரசஞ்சித் கோஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் இரு சடலங்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த காதல்ஜோடிகள் என்பதும் விடுதியில் கணவன் மனைவி எனக் கூறி தங்கி வந்ததும் தெரியவந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்  காதலியை காதலன் கொலை செய்தது தெரியவந்தது, பின்னர் நேற்று சஞ்சய் கோஸ் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுதி அறையில் காதலன் காதலி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை