
தனது கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சென்னையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாண்டியராஜ். 50 வயதான இவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் பாண்டியராஜ் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கணவன் மீது ஏற்பட்ட அலுப்பு.? தனியா வீடு எடுத்து காதலன் உடன் என்ஜாய் செய்த மனைவி.. கழுத்தை அறுத்து கொலை.
கணவரை பிரிந்து வாழும் அந்தப் பெண்ணுக்கு பள்ளிக்கு செல்லும் ஒரு மகள் இருந்திருக்கிறார். iஇதனிடையே, கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே, அந்த மாணவிக்கு பாண்டியராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த சிறுமிக்கு 13 வயது. இந்த நிலையில் அந்த சிறுமியை பாண்டியராஜ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். தற்போது அந்த பெண் கல்லூரிக்கு சென்றுக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் அப்பெண்ணுக்கு பாண்டியராஜ் பாலியல் ரீதீயாக தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை.. அதிர்ச்சி சம்பவம் !
மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், அவரை பாலியல் வன்கொடுமை செய்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் அவர் மிரட்டி வந்துள்ளார். இதுக்குறித்து கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அப்பெண்ணை பல வருடங்களாக பாண்டியராஜ் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.