சிறுமியை காட்டுக்குள் தூக்கிச் சென்று கதற கதற பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் ! காதலன், முன்னாள் காதலன் உட்பட 4 பேர் கைது !!

Published : Sep 21, 2019, 08:41 AM IST
சிறுமியை காட்டுக்குள் தூக்கிச் சென்று கதற கதற பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் ! காதலன், முன்னாள் காதலன் உட்பட 4 பேர் கைது !!

சுருக்கம்

விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று 16 வயது சிறுமி 4  இளைஞர்கள்  கூட்டு பலாத்காரம் செய்தனர். . இதுதொடர்பாக சிறுமியின்  காதலன் , முன்னாள் காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வடக்கு செவல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் ,  ராமலிங்கம் ,  அழகுராஜா மற்றும்  ராமச்சந்திரன் . இவர்கள் 4 பேரும் நண்பர்கள். சுரேஷ்குமார், வேம்பாரில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மற்ற 3 பேரும் சென்னையில் உள்ள கடைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தனர்.

இந்த நிலையில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை சுரேஷ்குமார் காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு சிறுமியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்கள் பிரிந்து விட்டனர்.

இதற்கிடையே ராமலிங்கத்துக்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. நேற்று முன்தினம் மாலையில் ராமலிங்கம் தன்னுடைய காதலியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு, விளாத்திகுளம்-வேம்பார் ரோடு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு ஏற்கனவே சுரேஷ்குமார், அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் இருந்தனர். இதனைப் பார்த்து அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த சிறுதி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனாலுர் அந்த  4 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.. இதில் அந்த சிறுமி மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த  4 பேரும் அங்கிருநந்து தப்பிச் சென்றனர். இதற்கிடையே காட்டுப்பகுதிக்கு சிறுமியுடன் சென்ற வாலிபர்களின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்